செய்தியின் தலைப்பு-செய்தியின் தலைப்பு-‘தேவனுடைய வார்த்தை தவறிபோகாது’ 2-நாளாகமம் 20 அதிகாரம்
8. ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள்.
9. எங்கள்மேல் பட்டயம் நியாயதண்டனை கொள்ளைநோய் பஞ்சம் முதலான தீமைகள் வந்தால் அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால் நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்து நின்று எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில் தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.
10. இப்போதும் இதோ இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து வருகிறபோது அம்மோன் புத்திரர் மோவாபியர் சேயீர் மலைத்தேசத்தாருடைய சீமைகள் வழியாய்ப் போக நீர் உத்தரவு கொடுக்கவில்லை ஆகையால் அவர்களை விட்டு விலக அவர்களை நாசப்படுத்தாதிருந்தார்கள்.
11. இப்போதும் இதோ அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி தேவரீர் எங்களைச் சுதந்தரிக்கப்பண்ணின உம்முடைய சுதந்தரத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள்.
12. எங்கள் தேவனேஇ அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.