Live Tamil Christian Radio Now Playing
Radio Repeat Broadcast
Up Next
Radio Repeat Broadcast
Dec-23, Mon 00:00:AM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_982994423633487

செய்தியின் தலைப்பு- ‘மீட்பில் வெளிப்பட்ட அன்பு’ மத்தேயு 28-அதிகாரம் 1 முதல் 10 வசனம் வரை.
1. ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.
2. அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
3. அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
4. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்.
5. தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்ளூ சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
6. அவர் இங்கே இல்லைளூ தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்ளூ கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்ளூ
7. சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார்ளூ அங்கே அவரைக் காண்பீர்கள்ளூ இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
8. அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
9. அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
10. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்ளூ நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப்போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்ளூ அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.